ஆயிரம் சட்டங்கள் கண்டு பிடிக்கட்டும்.. அனுதினம் ஆட்சிகள் நூறு...
ஆயிரம் சட்டங்கள்
கண்டு பிடிக்கட்டும்..
அனுதினம் ஆட்சிகள்
நூறு மாறட்டும்..
ஆயினும் மனிதா
நீ விழித்தெழாது..
மலர்சிகள் காணாது
இவ்வையம்..
சோர்ந்தது போதும் மானிடரே
சேர்ந்திங்கு உழைத்தே
சரித்திரம் படைப்போம்..
நன்மை நல்க ஒருகணம்
நம்மில் தாமதமாக..
நாளைய அழிவும்
இன்றே வரும்..!
பிறர்வலி நமக்கு இன்று
வேடிக்கை என்றால்..
நாளை நம்வலி உணர
மானிடர் உண்டோ..???
விழித்தெழு மனிதா விழித்தெழு
ஒன்றுபட வெற்றிகள் வரும் விழித்தெழு..!!
..கவிபாரதி..