தமிழ் விளம்பரம் வழிமுறைகள்

(Eluthu Advertising Instructions)

To View in English

உங்கள் விளம்பரத்தை எழுத்து வலைத்தளத்தில் விளம்பரப்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:


1. முதலில் விளம்பரத்தை உருவாக்க வேண்டும் .
i) விளம்பரம் விளம்பரப் படமாகவோ அல்லது விளம்பர உரையாகவோ இருக்கலாம்.
ii) சரியான விளம்பரப் படம் அல்லது உரை மற்றும் விளம்பரத்திற்கான இணைய இணைப்பு கொடுத்து விளம்பரத்தை உருவாக்க வேண்டும்.
iii) விளம்பரப் படமாக இருந்தால் - படத்தை பதிவேற்றவும்.
படத்தை பதிவேற்றிய பின்னர் விளம்பர தோற்றப்பகுதியை தேர்வு (Crop) செய்யவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் படத்தின் பகுதியின் உயரம் மற்றும் அகலத்தை மாற்றிக்கொள்ளலாம். பிறகு தேர்வு செய் என்னும் பொத்தானை அழுத்தவும்
iv) விளம்பர உரையாக இருந்தால் - விளம்பர உரைக்கான தலைப்பு மற்றும் விளம்பரத்திற்கான விளக்கங்களை கொடுக்கவும்.
விளம்பரத் தலைப்பு மற்றும் விளக்கங்கள் 100 எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


2. எழுத்து குழுமம் உங்களின் விளம்பரத்தை பரிசீலித்த பின்னர் எழுத்து வலைத்தளத்தில் வெளியிடும்.
i) உங்களின் விளம்பரம் எழுத்து விதிமுறைகளை மீறி இருந்தால் விளம்பரங்கள் காண்பிக்கப்படமாட்டது.
ii) சந்தை மதிப்பின் அடிப்படையில் பார்வைக்கான தொகை கணக்கிடப்படும்.
iii) பார்வைகளுக்கான தொகை தங்கள் எழுத்து கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும்.
iv) தாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு விளம்பரமும் எழுத்து குழுமம் பரிசீலித்த பின்னர் எழுத்து வலைத்தளத்தில் காண்பிக்கப்படும்.
v) தாங்கள் கோரிய பார்வைகளோ அல்லது கோரிய மாதமோ முடிந்து விட்டால் தங்களின் விளம்பரம் நிறுத்தப்படும்.


3. விளம்பரத்திற்கான தொகையை நிதி சேர் எனும் பகுதியில் செலுத்தவும். தாங்கள் செலுத்திய தொகை உங்களின் எழுத்து கணக்கில் சேர்க்கப்படும்.
i) ஒவ்வொரு நாளும் உங்களுடைய விளம்பர பார்வைகளுக்கான தொகை, உங்களுடைய எழுத்து கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும் .
ii) தங்களுடைய எழுத்து கணக்கில் நிதி இல்லையெனில், நிதி சேர்க்கும் பொழுது முந்தைய பார்வைகளுக்கான தொகை எடுத்து கொள்ளப்படும் .
iii) உங்கள் விளம்பரத்தின் குறிப்பிட்ட பார்வை வரை , 1000 பார்வைக்கு ருபாய் 10 எனும் அளவில் வசூலிக்கப்படும். அதன் பிறகு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பார்வைகளுக்கு ஆகும் செலவு மாற்றப்படும்
iv) பிறகு உங்களுக்கு தேவையான அளவில் விளம்பரப் பார்வைகளை (ad views) நீங்கள் அதற்கான தொகையில் (சந்தை மதிப்பிற்கேற்ப) முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும்.





புதிதாக இணைந்தவர்

மேலே