எண்ணம்
(Eluthu Ennam)
வரலெஷ்மி விரதம்..!அம்பிகையின் அருள்நிறை நன்னாளதை மனத்..தெம்புடனே வழிபட்டாலுண்டு சுமங்கலி... (பெருவை கிபார்த்தசாரதி)
04-Aug-2017 12:16 pm
வரலெஷ்மி விரதம்..!
அம்பிகையின் அருள்நிறை நன்னாளதை மனத்..
தெம்புடனே வழிபட்டாலுண்டு சுமங்கலி வாழ்க்கை.!
வரங்களையெல்லாம் அள்ளி அள்ளித் தருவதால்நீ
வரலெஷ்மியாய் மாலின் மார்பிலகலாயிடம் பெற்றாய்.!
பெண்டிற்கு மாங்கல்ய பாக்கியம் அருளுமுனை
அண்டி..கனகதாராபாடிய சங்கரருக்கு அருளியவளே.!
கற்றுணந்தே அம்பிகையின் அருள் வேண்டிவாழ்வில்
பெற்றோம் பலபாக்கியம்..தனம் தான்யம் கல்வியென.!
வற்றாத அருட்பொய்கையே அன்னை வரலட்சுமியே
பற்றியெமை ஆட்கொள்வாய்..ஆயுள்பலம் கீர்த்தியொடு.!
எண்ணியவர்க் கெல்லாம் அருளும் லலிதாம்பிகையே
புண்ணிய செய்கையின் பலனையெமக்கு அருள்வாய்.!
கடற்பிறந்த கோதையாமவள் இலக்குமியே..எம்பிறவினொடு
உடற்பிறந்த ஊழ்வினை யகற்றயுனைச் சரணடைந்தோம்.!