எண்ணம்
(Eluthu Ennam)
தீவிர சிகிச்சைப் பிரிவு===========================நோயாளியைப் போல இருக்கிறது அரசு நூலகத்துறை... (மலர்91)
05-Apr-2016 7:16 pm
தீவிர சிகிச்சைப் பிரிவு
===========================
நோயாளியைப் போல இருக்கிறது அரசு நூலகத்துறை - சொல்பவர் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள். ’தி இந்து’ நாளிதழில் தங்கர் பச்சான் எழுதித் தொடராக வெளிவந்த “சொல்லத் தோணுது” நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஐ.ஏ. எஸ் அதிகாரி சகாயம் வெளியிட முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கே . சந்துரு பெற்றுக் கொண்டார். கல்வியாளர் பழனி ஜி. பெரியசாமி. வேளாண்மை அறிவியளாலர் ப. வெங்கடாசலம், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி உள்ளிட்டோர் படத்தில் உள்ளனர். அப்போது நீதியரசர் சந்துரு அவர்கள் பேசியது ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது.. அந்தப் படமும் செய்தியும் தான் நீங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ள படத்தில் காண்பது. எனது கருத்து: கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசின் கல்வித் துறை எட்டாம் வகுப்பு வரை இலவசத் தேர்ச்சி, அதன் பின்னர் தாராள மதிப்பெண் வழங்கல் போன்றவற்றால் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் கல்வித் தரம் தாழ்ந்து போகிறது. ஆந்திர அரசின் பாடத் திட்டத்தைப் போன்றதொரு உயர்த்தப்பட்ட பாடத் திட்டத்தை பள்ளிகளில் நடைமுறைப் படுத்தவேண்டும். பாடத் திட்டம் செம்மையாக இல்லாததால் எதற்கும் பயனற்ற எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை தான் பெருகிவருகிறது. கல்லூரி மற்றும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் கருத்தை அறிந்தால் தான் பள்ளிக் கல்வித் தரம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கிறது என்ற உண்மை தெரியும். இவ்வுண்மையைப் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலோர் அறிய வாய்ப்பில்லை.
தகவலுக்கு நன்றி அய்யா. தாங்கள் கூறியது பற்றி சிறு விளக்கம் ஒன்றைத் தந்தால் தேடல் எனக்கு எளிதாக இருக்கும். 08-Apr-2016 10:51 pm
பாராட்டுகள். நன்றி.
கூக்லே தளத்தில் விரிவாக அனைத்து தகவலும் பார்க்க வேண்டுகிறேன்.
06-Apr-2016 6:38 am