எண்ணம்
(Eluthu Ennam)
எழுத்து தள எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் என் அகமகிழ்ந்த பொங்கல்... (பெருவை கிபார்த்தசாரதி)
14-Jan-2018 2:32 pm
எழுத்து தள எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் என் அகமகிழ்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
பொங்கல் திருவிழா..!
……….பண்டிகைக்கிங்கே பஞ்சமில்லை பலவு முண்டாம்.!
……….அளவில்லாமல் தானம்செயும் எண்ணமெழும் விழா.!
……….மாண்டாலும் பெருமை சொல்லுமவ் மஞ்சுவிரட்டு.!
……….ஈண்டிய பெருந்தகையும் பெருமையுடன் வாழ்த்துவர்.!
பாண்டியனும் சேரசோழனும் பார்த்துக் களித்தவிழா..
……….பாரத்தின் பெருமை சொல்லும் விழாவிலொன்றாம்.!
வேண்டும் வேண்டாமை எனுமெண்ணம் இலாமல்..
……….வேற்றுமை சிறிதுமிலா உதட்டிலன்று உவகையெழும்.!
ஆண்டுதோறும் நிறையும் அளவிலா மகிழ்ச்சியும்..
……….அனைத்துயிரும் இன்புற்றிருக்கும் பொங்கல் விழா.!
வீண்போக்கு போக்காமை வீடெலாம் சுத்தம்செய்து..
……….விளைந்த தானியத்தால் விருந்தினரை உபசரிப்பர்.!
ஆண்பெண் எனும்பாகுபாடு இல்லா இனியவிழா..
……….அளவில்லாமல் தானம்செயும் எண்ணமெழும் விழா.!
மீண்டும் மீண்டும் வரவேண்டுமிப் பொங்கல் விழா..
……….மாண்டாலும் பெருமை சொல்லுமவ் மஞ்சுவிரட்டு.!
யாண்டும் நிலையாய் பொங்கலின் புகழோங்கவே..
……….ஈண்டிய பெருந்தகையும் பெருமையுடன் வாழ்த்துவர்.!
=======================================================
நன்றி:: வல்லமை வெளியீடு::14 - 01 -18