எண்ணம்
(Eluthu Ennam)
என் பள்ளிக் கூடமே
சோகங்கள் படிந்த
இரு கண்களோடும்
சோர்ந்து போன
பாதங்களோடும்
உன்னை சரணடைவேன்..
சனியும் ஞாயிரும் தவிர்த்து
சகல ஐந்து தினங்களும்
நொந்து தான் நான் இருந்தேன்
இன்னா செய்தாரை
ஒருக்கச் சொன்னாய்
பிகோல்டுகெர் சிங்கில்
இன் த பீல்ட் என்று
தனிமையை சொன்னாய்
ஒரு முக்கோணத்தின் பக்கம்
அதனால் உருவாக்கப்பட்ட
இரு பக்கங்களின் வர்கங்களுக்கு
சமம் என்று சொன்னாய்..
திடப் பொருள்
திரவம் ஆகாமல்
வாயுவாவது
ஐசோடோப்புகள்
என்று சொன்னாய்..
ஆஸ்திரிய குடிமகன்
ஜெர்மனிக்காக வாழ்ந்து
ஹிட்லர் மறைந்தான்
என்று சொன்னாய்..
உன்னை மனப்பாடம்
செய்ய
பயந்து தான் போனேன்
மறைத்து சேர்த்து வைத்து
கற்பூரம் வாங்கி கொளுத்தி
கடவுளை என்னை
பாஸாக்க வேண்டிக் கொண்டேன்..
ஒரு மனுனீதி சோழன்
மணி கட்டி வைத்து
என் சோகம் தீர்க்க
விரைந்து வரக் கூடாத
என்று யோசித்தேன்..
நாட்க்கள் நகர்ந்து போனது..
தேசம் தாண்டி
இன்று நான் அரசாள்கிறேன்
நீ மட்டும் இல்லை என்றால்
என் தேசத்துக்குள்
நான் அரசியல்வாதி ஆகிருப்பேன்..
நன்றி என் பள்ளிக்கூடமே
கல்வியின் தரம்
தமிழகம் உட்பட இந்திய கிராமங்களில் உள்ள இளைஞர்களில் 50% பேருக்கு சரியாக நேரம் கூட பார்த்து சொல்ல தெரிவதில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்திய கிராமத்தில் 14 - 18 வயதுள்ளவர்களில்..
* தாய் மொழி வாசிக்க தெரியாதவர்கள் 25 %
* இந்திய வரைபடமே தெரியாதவர்கள் 14 %
* நாட்டின் தலைநகர் தெரியாதவர்கள் 36 %
* மொபைல் போன் வைத்திருப்பவர்கள் 73 %
ப்ரதம் (Pratham) என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, 2017ல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 24 மாநிலங்களில், 28 மாவட்டங்களில் கல்வி தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை பர்தம் நேற்று வெளியிட்ட நிலையில், பல அதிர்ச்சிகர முடிவுகள் தெரியவந்துள்ளது. அதன்படி, 14-18 வயதுள்ளவர்களில் 25% பேருக்கு, தங்கள் அடிப்படை தாய் மொழியை வாசிக்க தெரியவில்லை என்றும், பாதி பேருக்கு வகுத்தல் கணக்கு புரிவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 43% பேருக்கு மட்டுமே ஒரளவுக்கு தவறு இல்லாமல் செய்கிறார்கள்.
இதை விட அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், தமிழகம் உட்பட இந்திய கிராமங்களில் உள்ளவர்களில் 50% பேருக்கு சரியாக நேரம் கூட பார்த்து சொல்ல தெரிவதில்லை. ஆனால், 73% பேர் செல்போன் பயனாளர்கள்.