எண்ணம்
(Eluthu Ennam)
எழுத்து தள வாசக அன்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும், உலகத் தமிழ்... (பெருவை கிபார்த்தசாரதி)
14-Apr-2018 4:32 pm
எழுத்து தள வாசக அன்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும்,
உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
சித்திரையே வருக!
சித்திரை முதல் நன்னாளில்..சிந்தனையில்
......சிறப்பாகத் தோன்றி யதைச் சொல்கிறேன்.!
பத்தரை மாற்றுத் தங்கமாமது! மாதங்கள்
......பன்னிரண்டில் முதன் மையாய்த் திகழுமே.!
அத்துணை நன்மைகளும் நம்மிடம் வந்து
......அடையுமாறு அச் சித்திரையும் வழிசெயும்.!
முத்திரை பதிக்கும் வாழ்விலொரு நாளாக
......சித்திரை நாட்களனைத்தும் நல் நாட்களே.!
சித்திரைத் திருநாள் பிறந்தநன் நாளில்நம்
......சிந்தனையும் நன்றே சிறப்புற வேண்டும்.!
தித்திக்கும் பல திருவிழாவைத் தருகின்ற
......தெவிட்டாத இன் பத்தையுமது அளிக்கும்.!
கத்திரி வெயிலின் வெப்பமிக விருந்தாலும்
......குளிருமது!கொண்டாடும் திரு விழாவால்.!
புத்தாண்டின் முதல் நாளாமின்று அதைப்
......புன்னகையோடு புகழுற வர வேற்போம்.!
========================================
வெளியீடுகள்:: வல்லமை, பிரதிலிபி
நன்றி :: கூகிள் இமேஜ்
அன்பின் ஆவுடையப்பன்
அய்யாவின் கருத்துப் பதிவுக்கு
அகமகிழ்ந்த நன்றிகள்..பல 17-Apr-2018 1:09 pm
போற்றுதற்குரிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பிய தமிழ் கவிக்கு தமிழ் அன்னை ஆசிகள் 17-Apr-2018 5:16 am