எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முர சறைந்து நான் கூவுகிறேன்..
நர சிம்மா மீண்டும் வருவாயா..?      



இரண்டு மனமென்ப தில்லாது ஓர்

 ..........இரவும் பகலும் அல்லாத போதினில்


இரண்டு நிமிடத்திற்குள் எடுத்த ஒரு

..........இறை யவதாரமாம் நரசிம்மம் அதுவே.!


இரண்டு கரங்கள் போதுமென்றே நீ

..........இராக்கதரை அழித் தாயன்று! இன்று


இரண்டு கைகள் போதாது!..ஈராயிரம்

..........இரும்புக் கரமொடு நீஅவ தாரமெடு..!




இரணியனை மட்டு மழித்தால் போதுமா?

..........இன்றிருக்கும் நிலை என்று மாறுமப்பா?


இரக்க மற்றுச் செய்கின்ற செயல்களால்

..........இன்றிருக்கும் அவலங்கள் இனி மாறுமா?


புரண்டு படுத்தாலும் புத்தியில் எழாது

..........புதிய துன்பம் போக்க நீவரவேண்டும்.!


அரண்போல நீமீண்டு மொரு முறை
..........அவதரித்தாலே அது நமக்குப் போதும்.!
========================================

 ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி..சனிக்கிழமை..28-04-2018   

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யகம்


ஸ்ரீ மதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ஹ்மணே நம
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம 
ஓம் பூம் பூம்யே நம
ஓம் நீம் நீளாயை நம

சட்டென்று ந்ருசிம்மத்தைக் காணும் பட்ச்சத்தில், பெரிய அளவில் மந்திரங்கள் சொல்லி, நீண்ட நேரம் செலவழிக்காமல், சுருக்கமாக மேற்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லலாம்.  அல்லது, குங்குமத்தால் ஒவ்வொன்றையும் 12 முறை கூறி சிங்கவேளுக்கு அர்ச்சனை செய்யலாம்.

மேலும்

இன்றிருக்கும் நிலையை பட்டவர்த்தனமாக எழுதமுடியாத நிலையில், சூசகமாக அவதாரம் தேவை என்பதை புரிந்து கொள்ள முடியும்.. நன்றி அய்யா கவின் சாரலன் அவர்களே 28-Apr-2018 3:38 pm
படிப்போருக்கு புண்ணியம் , நாராயண பட்டத்திரி 18000 ஸ்லோகம் கொண்ட பாகவதத்தை ஒரு தசகத்திற்கு 10 பாக்களாக நூறு தசகத்தால் ஆன நாராயணீயமாக குருவாயூர் ஆலயத்தில் கண்ணன் திருமுன்பு இயற்றினார் . இயற்றும் போதே அப்படியா என்று நம்பூதிரி கேட்கும் போது சிலா பிம்பம் தலை அசைத்து ஆமோதிக்குமாம் . இரண்டு கரங்கள் போதுமென்றே நீ ..........இராக்கதரை அழித் தாயன்று! இன்று இரண்டு கைகள் போதாது!..ஈராயிரம் ..........இரும்புக் கரமொடு நீஅவ தாரமெடு..! ----தேவை இப்படியொரு அவதாரம் . வாழ்த்துக்கள். 28-Apr-2018 3:11 pm

மேலே