எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காரணப்பெயர்கள் :
  சப்தசிந்து :  
  • ’’சப்த’’ என்றால் ஏழு. 
  •  ’’சிந்து’’ என்பது இமயமலையில் தோன்றும் ஒரு ஆற்றின் பெயர். 
  • அதாவது, சிந்து நதியுடன் ஆறு துணையாறுகள் சேர்த்து, ஏழு நதிகள் பாயும் இடம் ''சப்தசிந்து'' என்று குறிக்கப்படுகிறது.   
  • அவை  :
  • 1.ஜீலம், 
  • 2.சீனாப், 
  • 3.ராவி, 
  • 4.சட்லஜ், 
  • 5.பியாஸ், 
  • 6.சரஸ்வதி, 
  • 7.சிந்து.   
  • இவற்றில், முதல் ஐந்தும் பஞ்சாப்பில் பாய்ந்து வளம் சேர்க்கிறது. 
  • சரஸ்வதி தற்போது மறைந்த போன ஆறுகளில் ஒன்றாகும்.  
  • சரஸ்வதி, இராஜஸ்தானில், ஓடிய ஆறுகளில் ஒன்று .  
ஆத்திச்சூடி கல்வி மையம்,அய்யூர் அகரம்.

மேலும்

காரணப்பெயர்கள் :

 தோஆப் (Doab) :  

  •  ‘’தோ’’ என்றால் இரண்டு.  
  • ‘’ஆப்’’ என்றால் ஆறு.  

  •  இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி ‘’தோஆப்’’ என்று அழைக்கப்படுகிறது.   இது, வளமான வண்டல் சமவெளியைக் கொண்டது.  
  • உதாரணமாக, கங்கைக்கும்,யமுனைக்கும் இடைப்பட்ட பகுதி ’’தோஆப்’’ என்று அழைக்கப்படுகிறது.   
  • அதேபோல், கிருஷ்ணா, துங்கபத்திரை ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள ஊர்  ‘’ரெய்ச்சூர் தோஆப்’’ என்று அழைக்கப்படுகிறது. 

 ஆத்திச்சூடி இலவச பயிற்சி மையம்,அய்யூர் அகரம்.

மேலும்




காரணப்பெயர்கள் :                              

பஞ்சாப் :               
  • ‘’பஞ்ச்’’ என்றால் ஐந்து. 
  • ‘’ஆப்’’ என்றால் ஆறு.

  • 1.ஜீலம், 
  • 2.சீனாப், 
  • 3.ராவி, 
  • 4.சட்லஜ், 
  • 5.பியாஸ்  என்ற ஐந்து ஆறுகள் பாய்ந்து வளம் சேர்ப்பதால், இவ்விடம் ‘’பஞ்சாப்’’ என்று பெயர் பெற்றது. 
  •   இவை, ஐந்தும் சிந்து (Indus) நதியின் துணையாறுகள் ஆகும். 
  •   இவற்றில், சீனாப்  சிந்து நதியின் மிகப்பெரிய துணையாறு ஆகும்.



ஆத்திச்சூடி கல்வி மையம், அய்யூர் அகரம்.     

                         
          

மேலும்


மேலே