எண்ணம்
(Eluthu Ennam)
நண்பர்களுக்கு வணக்கம்..! கடந்த வருடத்திலிருந்து இனி ஒவ்வொரு ஆண்டும்... (இரா-சந்தோஷ் குமார்)
10-Sep-2018 8:48 pm
நண்பர்களுக்கு வணக்கம்..!
கடந்த வருடத்திலிருந்து இனி ஒவ்வொரு ஆண்டும் அய்யா பெரியாரின் பிறந்த தினத்தினை ஒட்டி முழுநாள் நிகழ்வு நடத்தப்படும் என்று #வாசகசாலை முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி முதலாவது முழுநாள் நிகழ்வு கடந்த 17.09.2017 அன்று ஐந்து அமர்வுகளாக நண்பர்கள் ஆதரவுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அந்த வரிசையில் இரண்டாவது முழுநாள் நிகழ்வு வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. அதற்கு முதல்கட்டமாக ஐந்து அமர்வுகளின் தலைப்புகளை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இடம் மற்றும் இதர விபரங்கள் விரைவாக வரும் நாட்களில் வெளியாகும்.
நாம் தற்சமயம் எதிர்கொண்டு வரும் பல்வேறு சூழல்களையும் சமாளிக்க நமக்கு என்றுமே துணை நிற்கப் போவது அய்யாவின் சிந்தனைகளும் எழுத்துக்களும்தான். எனவே அது பற்றிய விரிவான உரையாடல்களுக்கு
நண்பர்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். இந்த முழுநாள் நிகழ்வுக்கு நண்பர்கள் அனைவரையும் வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. வரும் ஞாயிறன்று சந்திக்கலாம். நன்றி. மகிழ்ச்சி..!
நண்பர்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். இந்த முழுநாள் நிகழ்வுக்கு நண்பர்கள் அனைவரையும் வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. வரும் ஞாயிறன்று சந்திக்கலாம். நன்றி. மகிழ்ச்சி..!
மிக்க மகிழ்ச்சி , கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் , பெரியார் பிறந்த நாள் விழாவை , அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் , சிறுவர்களுக்கான பேச்சு போட்டி , ஓவியப்போட்டி நடத்துகிறோம் , வாழ்க பெரியார் , வளர்க சமூக நீதி !!! 10-Sep-2018 9:09 pm
கடவுள் மறுப்பை மட்டும்பெரியாரின் அடையாளமெனக் கற்பிதம் செய்து கொண்டு... (புதியவன் ராஜா)
28-Sep-2016 7:21 pm
கடவுள் மறுப்பை மட்டும்
பெரியாரின் அடையாளமெனக் கற்பிதம் செய்து கொண்டு மடமைக்குள்ளும், மூடத்திற்குள்ளும்
சஞ்சரித்த்துக் கொண்டிருக்கிறக்கிற
சகோதரிகளே.!
நீ மாதவிலக்கானால் தாய்மையின் உன்னதத்தைப் போற்றாது..
நாய்போல் வெளியில் தள்ளி தனித் தட்டு, குவளையென வீட்டுத் தீண்டாமையில் தள்ளப்பட்ட உன்னை..
மீட்டு வீடு சேர்த்தது, உன் அப்பனோ, அண்ணனோ, கணவனோ அல்ல.!
நீ வெறுத்து ஒதுக்கும் இந்தக் கிழவன்தான்.!