எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மரணம்



இரவில் படுக்க போகும் முன் 

என் இஷ்ட தெய்வம் ஆன உன் 
பெயரை உச்சரிக்கின்றேன் 
அந்த இரவே என் கடைசி  
இரவு ஆனால் 
நான் இறுதியாக உச்சரித்ததும் 
உன் பெயர் ஆக இருக்க வேண்டும்.

மேலும்

௨ரையாடல் யாரிடம்?


அன்பாக பேசி 
அனைவரிடமும் உரையாடு!
அல்லல்படும் விசயத்தை கூறாதே!
உன் மகிழ்ச்சியை   
ஊராரிடம் உரை!
துயரத்தை உறவினரிடம்
உரைக்காதே!
துன்பத்தை நண்பனிடம் உரை!
இன்பத்தை 
அனைவரிடமும் உரை!
கஷ்டத்தை கண்டோரிடம் கூறாதே!
கலங்கும் இதயத்தை யாரிடமும் காட்டாதே!
யாரும் எப்போதும் பகையாகலாம்.
உன் இரகசியங்களை  
யாரிடமும் கூறாதே!
வணங்கும் இறைவனிடம் மட்டுமே முறையிடு!
அவர் மட்டுமே உனக்கு
 என்றும் உதவுவார்.

மேலும்


மேலே