எண்ணம்
(Eluthu Ennam)
-------வெளி நாட்டில் தமிழ்--------அன்புள்ள எழுத்து தோழர்களுக்கும் என்னை பலபடிகள்... (இராசேந்திரன்)
13-Apr-2016 9:19 am
-------வெளி நாட்டில் தமிழ்--------
அன்புள்ள எழுத்து தோழர்களுக்கும் என்னை பலபடிகள் உயரச் செய்த தமிழறிஞர்களுக்கும் என் நன்றி.
உங்கள் கருத்து எனும் படிகளில் ஏறி வந்துதான் நான் முன்னேறி வருகிறேன் என்பதற்கு ஒரு உதாரணம்தான் இது.
தமிழ்மொழி கற்க ஆர்வம் காட்டும் தமிழ் மொழியல்லாத செர்மன், பிரெஞ்ச் போன்ற பிற மொழி பேசும் வெளி நாட்டு குழந்தைகளிடம் தமிழை மின்னிதழ் வழி கற்றுக்கொடுக்கும் பாலசந்திரிகை இதழில் என் அருவிச் சிற்றுலா எனும் குழந்தைப் பாடலை வெளியிட்டு இந்த கிராமியத்தவனையும் அந்த வெளிநாட்டு குழந்தைகளின் மனதில் இருக்கச்செய்து வருகிறது. இதற்கு அதன் ஆசிரியருக்கும் , நான் எழுதும் குழந்தைப் பாடல்களுக்கு ஓவியம் வரைந்து அழகு செய்யும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.
நன்றி தங்கையே , குழந்தைகளுக்கான பாடல் என்பதால் இதில் அவர்களின் சந்தத்தையே கொண்டு பாடல் எழுதினேன். 15-Apr-2016 7:12 am
கேயெனார் என்ற பெயரில் கட்டுரை,கதை எழுதி வருபவர் உங்கள் நண்பரா,, மிக்க மகிழ்ச்சி அய்யா. அவருக்கும் தங்களுக்கும் என் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அய்யா. 14-Apr-2016 9:23 pm
நன்றி அய்யா. இயற்கைத் தாயின் உன்னதங்களுக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. அதையே கருப்பொருளாய் எடுத்துக்கொண்டு குழந்தைகள் பாடி மகிழ எழுதினேன். தங்களைப் போன்றவர்களின் ஆசிகள் அய்யா. தமிழின் இனிமையும், அதன் அருமையும் வெளி நாட்டு பிறமொழி குழந்தைகளும் அனுபவித்து அதன் உயரத்தை தெரிந்துகொள்ள இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும், தமிழை ஏதாவது ஒரு வகையில் குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் எனக்கு ஒரு வாய்ப்பாகவும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து குழந்தைகள் பாடல் பகுதியை எழுத எனக்கு ஒதுக்கிய ஆசிரியருக்கும், தளத்தோழர்கள் மற்றும் உங்களைப் போன்ற அறிஞர்களும் தான் காரணம். என் பாடல்கள் அதில் குழந்தைப் பாடல் பகுதியை மாதமிருமுறை அலங்கரிக்கப் போகிறது. 14-Apr-2016 7:38 am
நன்றி தோழரே. 14-Apr-2016 7:25 am