ஒற்றளபெடை

(Otralapedai)

ஒற்றளபெடை

ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை


ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பது, ஒற்றளபெடை எனப்படும்.

ஒற்றளபெடை என்பது செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் (ஃ) மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுப்பதேயாகும்.

ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினை அடுத்து அதே எழுத்து எழுதப்படும்.

உதாரணம்

வெஃஃகு வார்க்கில்லை - குறிற்கீழ் இடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை - குறிலிணைகீழ் இடை

மேற்கண்ட உதாரணங்களில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம்.



மேலே