உயிர் மெய் எழுத்துக்கள்
(Uyirmei Eluthukkal))
உயிர் மெய் எழுத்துக்கள்
உயிர்+மெய் = உயிர்மெய்
ஓர் உயிரெழுத்துடன் ஒரு மெய்யெழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.
உதாரணம்
க் + அ = க
க் + ஆ = கா
க் + ஈ = கீ
'க்' எனும் மெய்யெழுத்து 'அ, ஆ மற்றும் ஈ' போன்ற உயிரெழுத்துக்களுடன் சேரும் போது 'க, கா மற்றும் கீ' போன்ற உயிர் மெய்யெழுத்துக்கள் பிறக்கின்றன.
இவ்வெழுத்து பிறப்பதற்கு மூலமாக உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் இருப்பதினால் இது சார்பெழுத்தாகிறது.
இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் ( 18 X 12 = 216 ) உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
உயிர் மெய் எழுத்து வகைகள்
(Uyirmei Eluthu Vagaigal)