பொன் மாலைப் பொழுது

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வான மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்


கவிஞர் : வைரமுத்து(21-Apr-12, 9:56 am)
பார்வை : 38


பிரபல கவிஞர்கள்

மேலே