ஓசை புதையும் வெளி

உரக்கப் பேசுவதாய்க்
கோபப் பட்டாய்
மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க்
குற்றஞ்ச் சாட்டினாய்
புணர்ச்சியில் கூட முனகல்கள்
தெருவெங்கும் இறைவதாய்
எரிச்சல் பட்டாய்
வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள்
உனக்குள்
வெந்நீர்க் கொப்புளங்களையே
உருவாக்கின எப்போதும்
மெல்ல அடங்கிய என் சப்தங்கள்
புதைக்கப்பட்டன உன் வெளியில்!


கவிஞர் : தி. பரமேசுவரி(2-May-14, 12:24 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே