நிழ‌லும், ந‌ன்னீரும் !!

முன்பெல்லாம்..,
கோபப்பார்வை ஒன்று போதும்
நான் கொழுந்துவிட்டு எரிய!
இன்றோ
ஆசை ஆசையாய்
அள்ளிச் சேர்க்கிறேன் உன்
அனல் வார்த்தைகளை!!

என் நினைவு அல‌மாரியில்
ர‌சித்துக் கொண்டே
சேக‌ரிக்க‌த் தொட‌ங்கிவிட்டேன்
உன் கோப‌த் த‌ருண‌ங்க‌ளை,
த‌டுக்கிவிழுந்துவிட்ட த‌ரையை
த‌ன் கையால்
அடித்து அழும் குழ‌ந்தையை
ஆசையோடு அணைத்துக்கொள்ளும்
ஓர் அன்னையைப் போல‌!!

உன்னிட‌மிருந்தே க‌ற்றுக்கொண்டேன்,
காய‌ப்ப‌டுத்தும் வார்த்தைக‌ள்கூட‌
க‌டின‌மாய் இல்லை
என் தாய்மொழியில் என்ப‌தையும்!!

நிழ‌லும், ந‌ன்னீரும் தான்
இனிமை என்றால்,
வெயிலையும், வெந்நீரையும்
என்ன‌வென்று சொல்வீர்கள்
.
.
குளிர்கால‌த்தில்!?!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 2:55 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே