முதல் துளி!

வர மறுத்தக் கண்ணீரோடு
மல்லுக்கட்டிக் கொண்டிருந்தபோது,

தாங்கள் அர்த்தமிழந்து போனதையறிந்து
நிறமுதிர்த்து உதிரத் தொடங்கிய,‌
நம் பிரியத்தின் ஆழமுரைத்த‌
என் கவிதை வரிகளின் மைத்துளியொன்று,

என் மீது பட்டுத்தெறித்த‌
அந்த ஒரு நொடிப்பொழுதில்
அது நிகழ்ந்தேவிட்டது,

என் கண்களின் ஓரத்திலிருந்து
ஓர் முதல் துளி!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 3:01 pm)
பார்வை : 0


மேலே