காதல் போயின் காதல் போயின்

இனிது காதலி திருமுகம் காண்டல்

இனிது காதலி மென்சொல் கேட்டல்

இனிது காதலி குறுஞ்செய்தி பார்த்தல்

இனிது காதலி எண்ணி இருத்தல்

இனிது காதலி கனவில் தோன்றல்

இனிது காதலி மெய்ப்புறம் தீண்டல்

இனிது காதலி வாய்ச்சுவை அறிதல்

இனிது காதலி முலைதலை சாய்த்தல்

இனிது காதலி அல்குல் தைவரல்

காதல் காதல் காதல்

காதல் போயின், காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

இனிது அவட்காய் மரித்தல் தானே!

பெற்றவர் உற்றவர் நட்பினர் அல்லால்

மரித்தால் எவர்க்கும் இல்லை சேதம்

1,24,66,39,478இல் ஒன்று

இருந்தால் என்ன? இறந்தால் என்ன?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:18 pm)
பார்வை : 0


மேலே