மானுடம் - மண்ணுள்ளிப் பாம்பு

ஆணாய் பெண்ணாய் அலியாய்
இருத்தல்
இருதுடை நடுவின் இயல்பு
என்பதோர்
நேர்தல்
எனின்
ஆணாய் பெண்ணாய் அலியாய்
வாழ்தல்
நேர்தல் அல்ல
மானுடம் என்பது
நேர்தலில் இல்லை
வாழ்தலில் துளிர்க்கும்
பசிய சிறுபுல்
மாடு கடிக்கும்
காய்ந்தும் கிடக்கும்
கவிந்து வளர்ந்து
மண்ணும் மூடும்..!!!


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:21 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே