ஞானோபதேசம் - மண்ணுள்ளிப் பாம்பு

பொய்யின் மொழி பேசு
தாயின் கோயிலில் திருடு
பேரிளம் பெண்ணையும் கற்பழி
சகமனித உதிரம் உறிஞ்சு
பிள்ளைக்கறி சமைத்துண்
பொன்னும் பொருளும் கொணரா மருமகளைக்
கருக்கு
கொலைத் தொழில் பழகு
உயிர் மருந்தில் ஊழல் செய்
செய்க பொருள்
வையத் தலைமை கொள்
வாழ்வாங்கு வாழ்வாய் காண்


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:22 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே