கால முதல்வன்

பொருட்டின்றிக் கடந்து போயிற்று
தொடர்ந்தேகினேன் தொலையாத் தூரம்
காலத்தைத் தாண்டுதல் சாலுமாவெனப்
பொருள் விடிந்தபோது
பொருட்டற்றுப் போயிற்று எனக்கும்
எனினும் பின்னால்
தொடர்ந்தோடி வருகுவதென்
கால முதல்வனே!


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:33 pm)
பார்வை : 0


மேலே