லட்டும் தட்டும்

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு.

எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.

மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.

கிட்டு நான்கு லட்டு,
பட்டு நான்கு லட்டு,
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு


  • கவிஞர் : அழ. வள்ளியப்பா
  • நாள் : 12-Jul-11, 12:03 pm
  • பார்வை : 802

பிரபல கவிஞர்கள்

மேலே