சித்திரச்ச சோலைகளே
சித்திரச்ச சோலைகளே - உமை நன்கு
திருத்த இப்பாரினில லே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ !
உங்கள் வேரினிலே.
நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு
நெல்விளை நன்னிலம் - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.
தாமரை பூத்த தடாகங்களே, உமைத்
தந்த அக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.
மாமிகு பாதைகளே, உமை இப்பெரு
வைய மெலாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம ் உழைத்தார்.
ஆர்த்திடும ் யந்திரக் கூட்டங்களே - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?
கீர்த்தி கொள் போகப் பொருட்புவி யே! உன்றன்
கீழிருக்கு ம் கடைக்கால் - எங்கள்
சீர்த் தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம் வெளி காற்றென
நின்ற இயற்கைகளே - உம்மைச்
சாரும் புவிப்பொரு ள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!
தாரணியே! தொழிலாளர் உழைப்புக்க ுச்
சாட்சியும் நீயன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர் போக்கும் எனச் சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?
எலிகள் புசிக்க எலாம் கொடுத்த சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளிப்பதே பெரும்
புதரினிலே தூங்திடுமோ ?
கிலியை விடுத்துக் கிளர்ந்ததெ ழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசமில் லை - சொந்த
வலிவுடையார ் இன்ப வாழ்வுடையா ர் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.