தமிழ் கவிஞர்கள்
>>
பா.விஜய்
>>
காற்சிலம்பின் ஓசையிலே
காற்சிலம்பின் ஓசையிலே
விதி என்பது
தன்னம்பிக்கை அற்றவனின்
தாய்மொழி
அது
இறந்து போய்
நடனமாடிக்கொண்டிருக்கும்
வாழத் தெரியாதவனின்
வாய்ப்பாடு
அது
தன் எச்சிலைக்கூட
அடுத்தவன் வாய்மூலமாய்த்
துப்பிவிட முடியுமாஎன
சோம்பிக் கிடப்பவனின்
ஒப்பாரி
விதியை நம்பி
முகந்தொங்க மாட்டான்
மூலிகைத் தமிழன்
எந்த எறும்பு
விதியை நம்புகிறது?
எந்தப் பறவை
விதியை நம்பி
விழிநீர் உகுக்கிறது?