உழவும் உழவனும் மரண விளிம்பில் (பொங்கல் விழா போட்டிக் கவிதை)

களவு செய்து ,பதுக்கி வைத்துப்
பிழைக்கும் நாட்டில்,
உழவு செய்து,உன்னதமாய்,
வாழ்ந்து வந்தோம்!
விதை நெல்லை ஏமாற்றி
விற்று வந்தார்! உர
விலைகளையும் உயரத்தில்
ஏற்றி வைத்தார்!
இரசாயன உரங்களைத்
தலையில் கட்டி,எம்
மண்ணையும் மலடாக
மாற்றி வைத்தார்!
கைக்கெட்டும் தூரத்தில்
நீர் இருந்தும்,தராமல்
கைகட்டி வேடிக்கை
பார்த்திருந்தார்!
அண்ணனின் திண்ணை
காலியாகும் என
மனைக்கட்டு விற்பவர்
காத்திருந்தார்!
மழை கூடப் பெய்யாமல்
மறுத்ததினால் ,இன்று
உழவும் உழவனும்
மரண விளிம்பில்!