இது முன்பனிக் காலம்.....

காலையில் சாரல் தூறும்....
சாலையில் ஈரம் சேரும்....
இறங்கிட இதயம் ஏங்கும்....
கிரங்கியே கண்கள் மூடும்.....

புல்லினம் புலரி பாடும்.....
கறவைகள் கன்றை தேடும்....
குமரிகள் கோலம் போடும்....
பூசணிப் பூக்கள் பூக்கும்...

எனை இறங்க விடாத ...
இல்ல சிறையில்.....
இருந்தபடி நான் பார்க்க ...

என் வாசல் வழி
கடந்து போகும்.....
அந்த இதமான
முன்பனிக் காலம்....

எழுதியவர் : (7-Jan-13, 8:13 pm)
பார்வை : 144

சிறந்த கவிதைகள்

மேலே