தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)
வருக ,வருக தை மகளே வருக!
வானவில்லை வாசலில் நிறுத்தி!
குறுஞ்சி பூவை கொட்டிப்பரப்பி!
ஏழிசை மேளம் கொட்டி!
மல்லிகை பூ மாலை தொடுத்து!
வான் மழைக்கேங்கி நிற்கும்!
வாடிய பயிர் போல!
கூடிய எம் உறவு!
கும்மியடித்து, குலவைபோட்டு!
ஆசை, ஆசையாய் அறுவடை துவங்க!
வா மகளே வா
தை மகளே வா!
என்றும் புன்னகையுடன்
சுபாஷ்