இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே! அது எப்படி?
காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்!
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம் பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சி க்கு வந்தார் காமராஜர். அதுதான் அவர் முத ன்முதலாக ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திட ம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சி க்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிக ள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாண வர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற் றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழ கத்தைப் பிச்சைக்கார மாநிலமாக முன்னி ருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமி ழகத்தை இந்தியா விலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டா வது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தி னார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற் சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிக ள் பெரும்பங்கு நம்பிக் கொண்டி ருக்கும் பாசனத்திட்டங்கள் காம ராஜர் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத் தில் இருந்தது 3 சர்க்கரைத் தொ ழிற் சாலைகள். அவர் ஆட்சி விட் டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவோ?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப் பேட் டை, மதுரை, மார்த் தாண்டம், ஈரோடு, காட் பாடி, தஞ்சாவூர், திருச்சி…என்று
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே!
காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)
இதில் இனொன்று கவனிக்க தக்க விஷயம் அவர் செயல் படுத்திய பெரும்பாலான மின் திட்டங்கள் சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாதவை .
காமராஜ் ஆட்சிக்கு வருவதற்கு முன் 160 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி அவரது ஆட்சி முடிகையில் 600 மெகா வாட்டாக உயர்ந்திருந்தது .மிக குறைந்த வருவாயை கொண்டே காமராஜ் இத்தனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்றால் இப்போதுள்ள அரசியல் வாதிகளுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் .