உண்டி சுருங்குதல் உலகிற்கு அழகு ( பொருளதாரக்கட்டுரை )

உண்டி சுருங்குதல் பெண்டிர்கழகு என்றார் தமிழ் புலவர் .தற்காலத்தில் உண்டி சுருங்குதல் உலகிற்கு அழகு என்றநிலை தேவைப்படுகிறது .இன்றைய உலகில் உண்டி (உணவு )செலவு பலமடங்கு அதிகரித்துக்கொண்டு செல்கிறது .இதனால் நுகர்வு செலவு அதிகரிக்க சேமிப்பு குறைகிறது .சேமிப்பு குறைந்தால் முதலீடு குறையும் முதலீடு குறைந்தால் உற்பத்தி குறையும் .உற்பத்தி குறைந்தால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் .

உலகில் உண்ணாமல் மாண்டவர்களை விட உண்டு (சாப்பிட்டு ) மாண்டவர் தான் அதிகம் அந்த அளவுக்கு மனிதன் நாவுக்கு அடிமையாகி விட்டான் .இதுதான் உலகமயம் வெற்றிபெற உதவிய பிரதான காரணிகளில் ஒன்று .

முன்னர் உல்லாசப்பயணம் (ரூறிசம் ) பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இயற்கை அழகையும் ரசிப்பதற்கும் வந்தவர்கள் .இன்று உலகநாடுகளின் உணவை ருசிப்பதற்காக உல்லாசப்பயணம் செய்யும் ஒரு சமுதாயம் தோன்றிவிட்டது .பெருமளவான பணத்தை நுகர்வுக்கு செலவிட்டு வருகின்றனர் .இதுதான் எதிர்கால சமூகத்தை சாவடிக்கும் செயலாக மாறிவருகிறது .தற்கால சேமிப்பை குறைநதே விட்டது .

உணவுப்பொருள் விலை அதிகரிப்புக்கு நுகர்வு அதிகரிப்பு தான் பிரதான காரணம் .அதுகூட பொறுத்துக்கொல்லாம்.புதிய நோய்களும் தோற்றம் பெற்றும் வருவதை உலகம் மறந்துவிடக்கூடாது .
உணவு "உணர்வை" தீர்மானிக்கும் பிரதான காரணி
எமக்கு பொருத்தமற்ற உணவை நுகரமுற்பட்டால்
தான் ஒழுக்க சீர்கேடு தோன்றிவருகிறது .

உண்டியை சுருக்குவோம் உலகை அழகுபடுத்துவோம் .

எழுதியவர் : கவிஞர் இனியவன் (7-Jan-13, 10:26 pm)
பார்வை : 190

சிறந்த கட்டுரைகள்

மேலே