விளம்பரத் தோற்றம் காட்டல்

மெல்லிய தேகம் கொள்ளும் கவர்ச்சி
எண்ணியவை மறக்கவைக்கும் ஏந்திழை
வேணியது விதவிதமாய் அலங்காரம் - விழி
விரியும் வியப்போடு உலா வரும்
தாகமது தானாக அணைந்து விடும்
மோகமது முற்றாமல் முதலாக்கும்
புன்னகையோடு உலாவரும் புது மலர்களே
வியாபார சந்தைகளில் பொருள் வைக்கும்
வெறும் மேசைகளோ நீங்கள்!?

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (9-Jan-13, 1:02 pm)
சேர்த்தது : thmizhnesan
பார்வை : 89

மேலே