@@@ தைமகளே வருக ! @@@ (பொங்கல் கவிதை போட்டி )

தமிழர் பண்பாட்டின் தலைச்சிறந்த சின்னமாய்
தரணியில் துன்பங்கள் நீங்கிய வண்ணமாய்
தண்ணீரின்றி கண்ணீர்வற்றும் முன்னமாய்
தன்னம்பிக்கையோடு கொண்ட எண்ணங்களாய்
தடையின்றி தமிழர்வாழ்வு செழிக்க திண்ணமாய்

தாளங்கள் போட்டு சோகங்கள் அகன்று ஓடியதாய்
தாபங்கள் வந்து கோபங்கள் விட்டு விலகியதாய்

தித்திக்கும் செங்கரும்பாய் வாழ்க்கை ஆனதாய்
திக்கெட்டும் பொங்கட்டும் வாழ்வு மகிழ்ச்சியாய்

தீராத இன்னல்கள் தீயில் போகட்டும் நிலையாய்
தீர்த்தமாய் வாரிஇறைப்போம் அன்பாய்

துக்கங்கள் தொலைந்து ஆக்கம் கொண்ட யுகமாய்
துள்ளிகுதித்து மகிழட்டும் எம்மக்கள் எல்லாமாய்

தூக்கம்தொலைந்த நாள் தூரம்போகின நிறைவாய்
தூறல்கள் மாறிப்போயின தினம் வரும் காற்றாய்

தெருவெல்லாம் இன்பவெள்ளம் பெருங்கடலாய்
தெவிட்டாத நல்லின்பம் உழவர்தம் பண்பாய்

தேவர்கள் விரும்பி வாழ வருவர் நம்நாட்டுக்காய்
தேவதைகள் பாடின உழவர் உறக்கத்திற்க்காய்

தைமாதம் எங்களுக்கு விடிந்திட்டு புத்துலகாய்
தைய தா தைய தா தைமகளே நீ வந்திட்டாய்
தைரியமும் தன்னம்பிக்கையும் தந்திட்டாய்
தைமகளே வருக !தமிழர் வாழ்வு மலர !

கவியாழினி...

எழுதியவர் : கவியாழினிசரண்யா.. (9-Jan-13, 5:45 pm)
பார்வை : 196

மேலே