இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

கல்நெஞ்சம் படைத்த கர்னாடகம்
காவிரியை சிறைப் பிடித்த காரணத்தால்

உச்சநீதி மன்ற தீர்ப்புகளையே
துச்சமென நினைத்து மதிக்க வில்லை !

நஞ்சை புஞ்சை எதுவும் விளையவில்லை
நெஞ்சம் கனத்து வேதனையில் விவசாயிகள் !

முப்போகம் விளைந்திட்ட பூமியில் இன்று
ஒரு போகம் கூட விளைவிக்க முடியவில்லை !

உலகிற்கே உணவு தந்த ஒப்பற்ற உழவன்
உணவுக்காக இழப்பிடு கேட்க்கும் அவலம் !

காவிரியும் வரவில்லை மாமழையும் பொழியவில்லை !
கண்ணீர்தான் வந்தது கஷ்டம்தான் வந்தது !

அறுவடைத் திருநாளில் அறுவடை இல்லை !
பொங்கல் திருநாளில் பொங்கிட வில்லை !

நெல்லுக்கும் வழியில்லை கரும்புக்கும்வழியில்லை !
நெருக்கடியில் விவசாயி நிம்மதியின்றி குடும்பங்கள் !

இன்பமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை !
இன்னலே மிச்சம் துன்பமே எச்சம் !

பொங்கல் வாழ்த்து சொல்ல மனமில்லை
பொங்க வில்லை விவசாயிகளின் வாழ்க்கை !

இனிக்கவில்லை பொங்கல் கசந்தது தமிழருக்கு !
இனியாவது நதிகளை இணைக்க முயலுங்கள் !

--

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Jan-13, 6:49 pm)
பார்வை : 119

மேலே