உழவின்றி உலகில்லை... (பொங்கல் கவிதை போட்டி)
தொழில்கள் பல உண்டு
அதில் உழவுக்கு தனி இடமுண்டு
உழவன் என்ற இனமுண்டு
அவனுக்கு இறைவன் என்ற பெயருமுண்டு
சராசரி மனிதனுக்கும்
தினசரி உயிர்வாழ
சமபந்தி விருந்து உழவால்
இயற்கையின் படைப்பில் செயற்கை கலந்தாலும்
தாயின் அன்பில் தூய்மை மாறாது போல
உழவால் தினம் பசியாறி சுழல்கிறது உலகம்
இரவும் பகலும் நீளும் போதும்
இருக்கிறதை விதைத்து
விளைவதை ஊருக்கு பங்கு வைப்பது
உழவில் மட்டுமே
கேட்காமல் கொடுக்கும்
கொடுக்காமல் கெடுக்கும்
கடவுளை போல உழவு சில நேரங்களில்
பிச்சை கேட்பவனும் பிச்சை கொடுபவனும்
ஒருசேர கையேந்த வேண்டும் பசி வந்தால்
மண்ணோடு மனிதனுக்கு இருக்கும்
கடைசி உறவு உழவு
உழவன் வியர்வைக்கு விலை கிடையாது
உழவின்றி உலகில் உயிர் வாழாது
உழவு உயிர்கள் பயிர் செய்யும் இடம்