Netrum Indrum

நேற்றும் இன்றும்
எத்தனையோ நாட்கள்
உன்னை தேடி
அலைந்திருக்கிறேன் . . .
நான் தொட முடியாத
உயரத்தில் நீ என்று
சோர்ந்து போய்
இருக்கிறேன் . . . . . . அன்று
நீ கிடைத்தவுடன்
ஆனந்தத்தில்
மலைத்துப் போனேன் . . .
கனவுகளில் கூட
கவிதை சொல்லி
விழித்திருந்தேன். . . . . . நேற்று
மறக்கவும்
முடியாமல்
மறைந்து
போகவும்
முடியாமல்
தவிக்கிறேன் . . . . . . . . . இன்று