தமிழ் மகளே வருக....(( பொங்கல் கவிதைப் போட்டி...))
தாய்க்குலத்தில் முதலாய் பிறந்தவளே...
தமிழ்குலமென புகழை வளர்த்தவளே.....
பாரில் நாங்கள் வாழ்வதற்கு....
பாடல் கோடி தந்தவளே................................................!
தமிழ் என்றப்பெயரோடு நீவந்தாய்.....
தமிழர்களின் பண்பாட்டில் நீவளர்ந்தாய்.....
தமிழர் தினமொன்று வந்திடவே....
தமிழ்மகளே உன்னை வரவேற்கின்றோம்...............!
பல்லாயிரம் ஆண்டுக்குமுன் நீபிறந்தாய்.....
பாரெல்லாம் சுற்றி நீவந்தாய்.....
புலவர் பெருமக்களைப் பெற்றெடுத்தாய்....
புரட்சிகள் பல செய்துவந்தாய்....................................!
பசியாய் நீ இருந்துவிட்டால்...
பிள்ளைகள் நாங்கள் பொறுக்கமாட்டோம்....
படையல் வைத்து வணங்கித்தானே...
தமிழ்மகளே உன்னை வரவேற்கின்றோம்...............!
தாய்த்திரு நாட்டில் பிறந்துவிட்டு....
தமிழனாய் எங்களை வாழவைத்து.....
தனியாய் ஒரு வரம்கொடுத்து....
சாதித்து விட்ட திருமகளே.............................................!
உழவனென்று உழைத்த நாங்கள்......
வியர்வைசிந்தி விளைவித்த நெல்லை....
விருந்தாக செய்து வைத்தோம்.....
வந்து ஏற்பாய் திருமகளே...............................................!