தை மகளே வருக (பொங்கல் கவிதைப் போட்டி)

(நவரச உணர்வுகள் அனைத்தும் வெளிப்படுமாறு இக்கவிதையில் முயற்சிக்கப்பட்டிருக்கிறது)

இளவர்கள் கனவுகள் கைகூட
அன்பின் மேன்மை வெளிப்பட
தைமகளே வருக சுபமுகூர்த்தங்கள் தருக! (அன்பு)

எங்களின் வருத்தமில்லா
வாலிபர் சங்கங்களை களைத்து திருத்திட
தைமகளே வருக திருத்தம் தருக ! (நகை)

பெற்று வளர்த்தபின் அநாதைகள் ஆகும்
வயது முதிர்ந்த குழந்தைகளை காக்க
தைமகளே வருக ஆதரவு தருக! (கருணை)

கட்டவிழ்த்த காளையாய் காணும்
பெண்டிரை எல்லாம் உறிஞ்சத் துடிப்பவரை
தைமகளே வருக வெட்டிச் சாய்க! (ரௌத்திரம்)

எல்லைக்கோட்டிலும் எல்லைத்தாண்டியும்
நிகழும் அநியாயங்களை வீர்கொண்டு அழித்திட
தைமகளே வருக வெற்றி தருக! (வீரம்)

அரசியல்வியாதிகளின் கொடுங்கோல் ஓங்குவதால்
பாமரனின் நீளும் பயத்தைப் போக்கிட
தைமகளே வருக தைரியம் தருக (அச்சம்)

காதலர்களின் கலப்புத் திருமணத்தின் வெறுப்பால்
நிகழும் கௌரவக் கொலைகள் இனியாவது
தைமகளே வருக தடுத்து நிறுத்துக! (வெறுப்பு)

இளைய சமூகத்தின் அறிவாற்றல்
மோலோங்கி நின்று அமைதியான வெற்றிதர
தைமகளே வருக வனப்பும் சாந்தமும் தருக! (வியப்பும் சாந்தமும்)

எழுதியவர் : அலெக்சாண்டர் (10-Jan-13, 3:35 pm)
பார்வை : 111

மேலே