உழவும் உழவனும் அழிவின் விளிம்பில் (பொங்கல் கவிதை போட்டி)

ஏற்றிவிடும் ஏணிக்குத்தான் என்ன அங்கிகாரம்?
பாட்டன் பூட்டன் கதைபேசி பழாய்கிடக்குது உழவு
காடி ஊற்றி காளி செய்தோம் கழனியை
வெட்கம் இல்லாமல் விற்றுவிடுகிறோம்
விவசாய நிலத்தை வீடு கட்ட

சோத்துக்கு வழிஇல்லாம சோலதாட்டய தின்கிறோம்
விவசாயம் இல்லையே வீடுங்கதான் நிறைஞ்சிருக்கு

எப்ப நீங்க உழவத்தான் உயர்வாக பார்பீர்களோ
அப்பவந்து உழவிடுங்கள் அதிசயம் தான் நடக்கும்

தானிய களஞ்சியம் தண்ணிஇல்லமா போச்சி
தென்னகத்து கங்கை இங்கே தேய்ந்து மணலாச்சு

உழவுக்கு உயிர் இருக்கு குரல்வளை
அருந்தவன் குற்றுயிர் போல
இத்தனை பேர் பார்க்கிறோம் எதுவும்
நாம செய்யல செத்தபின்பு ஒப்பாரி வைக்கும்
ஒப்பிலா உலகத்தீரே சற்று கவனியுங்கள்
சக கிடக்குது உழவு ,

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (10-Jan-13, 4:31 pm)
பார்வை : 103

மேலே