உழவின்றி உலகில்லை!!!(பொங்கல் கவிதை)

அரசே அரசே முடியரசே
உழவே உலகின் முதன்மை
தொழில் என்பதை எப்படி மறந்தாயோ?

மழையே மழையே உன் போலே
பைத்தியம் இதுவரை கண்டதில்லை
பெய்ந்து கெடுப்பாய் சில மாதம்
பெய்யாமல் பொய்ப்பாய் பல வருடம்

தமிழா தமிழா உன் வீரமெங்கே
அண்டா குண்டா துணையாக
அடகு கடையில் வைத்தாயோ!

உழுது உலுத்து போய்விட்டான்
உழவன் என்னும் பெருங்கிழவன்
அடக்கம் செய்ய வாருங்கள்
அடி வயிற்றில் ஈரத் துணியோடு

நாட்டின் இல்லாமை நோய் போக்கும்
ஒரே மருந்து வேளாண்மை
என்பதை மறவாதீர்!!!

உழவும் உழவனும் இருக்கும் வரை
உலகம் என்றும் அழியாது!!!

வியர்வை நீர் விட்டு
செங்குருதி உரமிட்டு
உழைப்பென்னும் ஏர் பிடித்து
நம்பிக்கை விதை போட்டா
நாளைக்கே முளைக்காதா
கலங்காதே என் தோழா
காலம் வரும் காத்திருப்போம்!!!

எழுதியவர் : (10-Jan-13, 4:29 pm)
சேர்த்தது : mogu
பார்வை : 143

மேலே