தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)
தைமகளே வருக....(பொங்கல் கவிதை போட்டி)
ஆயிரமாயிரம் கனவுகள் எனக்குண்டு.
உங்களுக்கும் கனவுகள் ஏராளம் இருக்கலாம்.
நம் கனவுகள் மெய்ப்பட வசந்தம் வேண்டி
இனிதாய் வரவேற்போம் ‘தைமகளே வருக’
ஒரிரு கனவுகள் பலனளிக்காது போகலாம்
ஆனால் தாமதமின்றி நீ நிறைவேற்றிட
எமக்கு சமுதாய கனவுகளும் உண்டு.
தலைநகரில் வீர மரணம் அடைந்த
இந்தியச் சகோதரியின் நிறைவேறாத கனவுகளும்
அமிலத்தால் உடல் வெந்து போராடும்
தமிழ்ச் சகோதரியின் மொத்த கனவுகளும்
இனிதாய் நடந்திட ‘தைமகளே வருக’
இந்த சகோதரிகளின் அவலமே இனி
இந்த தேசத்தில் கடைசியாக அமைய
தைமகளே உன் வரம் வேண்டும்.
எங்கள் பசியாற்றும் உழவன் உயிரே
உன் வரவு தான் தைமகளே!
உழவன் மனம் குளிர வண்ணமாய்
தைமகளே நீ வருக!
மாதங்களில் இளையவளே!
தை பிறந்தால் வழி பிறக்கும்
எல்லா துயரங்களையும் கடலின் ஆழம்
புதைத்து விட்டு நம்பிக்கை மலையாய்
வரவேற்கிறோம் ‘தைமகளே வருக’