இனி ஒரு பிறவி வேண்டாம்
காலையில் எழுந்து
கதிரவனைப் பாராது
பிஞ்சுகளின் பிணத்திலும்
வீருட்டோடும் இரத்தத்திலும்
பார்த்துத்தவித்த பாழான
அரக்கன் குடியிருந்த
வாழ்வின் நொடிகள் போதுமடா
ஆறறிவு அரசனும்
முப்படை முட்டாள்களும்
முண்டியடித்து அதரப்பதற விரட்டி
ஒட விட்டு பின்னுதைத்ததை
பசுமரத்தாணியாய் பதிந்து
படுக்கையிலும் பதறும்
பாழான இந்தபப்பிறவியில்
பரிதவித்தது போதுமடா
கொடியவரின் பிடியில்
கொடுங்கோலாட்சியில்
சிக்கிச் சிதறி அழுதழுது
துன்பமே துயராக தொடர்ந்த
துர்பாக்கிய வாழ்வுடன்
இனியும் ஒரு பிறவி வேண்டாமடா
என்னழுகை கேளாமல்
என்னருமை பாராமல்
கொண்டாடிச் சிரிக்கும்
கேவலங்கெட்ட மானிடம்
வாழும் இன்னொரு பிறவி
எப்போதுமே வேண்டாமடா