உறவுகள்

உறவென்ற வலை
பாசத்தால் பின்னப்படல் வேண்டும்
உடமைகளால் அல்ல .

புரிந்து கொள்ளலால்தான் வலுப்படும்
புரிந்து கொள்ளா மனங்களினால் அறுபடும்

உருவைப்பார்த்து மேம்படாது
உண்மையைப் பார்த்து மேம்படும்

பகைக்கும் போது போரிடாது
பணியும் போது பொழியும்

உணர்வுகள் உணரப்படுகையிலே
மெருகேறும் தங்கம் போல

உருக்குலைவைக் காணக் காண
உதிரம் துடிக்கும்

எதையும்
எதிர்பாராது

உண்மையில் துன்பம் என்றால்
உயிரையும் கொடுக்கும் உறவு

கண்கள் என்ற விளக்கினால்
பார்வை என்ற ஒளிகொன்டு
காட்சி என்ற பிம்பத்தைப்
பாதுகாத்திடும் இந்த உறவு .

எழுதியவர் : சுகந்த் (11-Jan-13, 11:10 pm)
Tanglish : uravukal
பார்வை : 164

மேலே