வீடாகும் வயல்வெளிகள்

‎'நம்குலமகள் இவள்'

லட்சம்கோடி ஆண்டுகளாய் நிலமகளும்தான்
நீர்இறைத்து மண்சுமந்து சமன்படுத்தி
புரவென்றும் படுகையன்றும் ஆக்கிவைத்தாள்.
கல்பிரித்து மண்சலித்து 'நன்செய்'வித்தாள்.
வண்டல்தனை சேர்த்துசேர்த்து நாளும்இங்கு
வகையான கற்புநெறி சேர்த்துவிட்டாள்.
ஒருசிறுகல் வயல்விழுந்தால் பாழாய்ப்போகும்
பெருங்கல்லேதான் கொட்டுகின்றார் பாழாய்ப்போவோர்.
கோலமகள் கற்பைக்காக்க வெகுண்டழுந்தாய் 'நம்
குலமகள்இவள்' கற்பைக்காக்க என்னசெய்தாய்?

பொங்கல் வாழ்த்துக்களுடன்
பொன்னுசுவாமி

எழுதியவர் : பொன்னுசுவாமி (13-Jan-13, 10:07 pm)
பார்வை : 119

மேலே