பெண்ணே ஏமாறாதே... ஏமாற்றாதே...
ஏமாறாதே....
பெண்ணே.... தங்க பெண்ணே.....
உன் மனதை பூட்டி வைத்திருந்தாலும்
பருவம் என்ற புயலாக
பள்ளி கொள்ள காதல் நுழையுமே
பட படக்கும் பட்டாம் பூச்சியாய்
ஆசைகள் வந்து பறந்து செல்லுமே....
ஆண்மகன் முகமே தேடிடுமே....
அவசரத்தில், அறியாமையில்
மூழ்கி திளைத்திடுமே-மனம்
மூச்சு விட காற்றில்லாமல்
காய்ந்து போகுமே...
உண்மை காதல் எது என்று
உணராத போது
உன்னால் ஒரு முடிவெடுக்க இயலாமல்
உயிரின் ஓசை கண்டு
உறக்கமின்றி தவிக்கும் போது
உன்னை,
உள்ளன்போடு நேசிக்கும் ஒரு
உறவினரிடம்,உறவிடம்
உறைவிடம் தேடி செல்......
உண்மையான காதல் இங்கே
குறைவு தானம்மா....
உடல் சுகம் ஒன்றே பெரிதும்
எதிர்பார்க்கும் உலகம் தானம்மா...
எண்ணற்ற காதல்கள்-நாட்களை
எண்ணிக்கொண்டு இருக்கிறது
எட்டி ஓடி விட,ஆதலால்
ஏமாந்து விடாதே-உன்
ஏற்றமிகு வாழ்வினை-காதல்
எனும் வாளினால் வெட்டிகொல்லாதே....
**********************************************************
ஏமாற்றாதே.....
பெண்ணே கண்ணே...
கண்ணகியும் சீதையும்
சத்தியவான் சாவித்திரியும்
வாழ்ந்த நாடம்மா.....
காதல் எனும் பெயரினை கொண்டு
கட்டுகோப்பான திருமகனின்
கள்ளமில்லா உள்ளம்தனை
கலங்க வைக்காதே...
வழக்கம் கெட்ட, ஒழுக்கம் கெட்ட
உன் குணத்தாலே, நடத்தையாலே
நாயாக மாறி நாகரிகம் இன்றி
அலையாதே....
பெண் பிறவி எடுத்து
ஒரு குடும்பத்தின் குத்துவிளக்காகி
வெளிச்சம் வழங்காவிட்டாலும்
அணைக்காமல் இரு...
ஒருவரின் வாழ்வினை
வளமாக்கவிட்டாலும்
வற்ற வைக்காமல் இரு...
ஏமாற்றி
உன்னையும் நீ உருமாற்றி
உலகத்தில் வாழ்ந்தென்ன?
வீழ்ந்தென்ன??
-PRIYA