உன் இதழ் அசைவுக்காக காத்திருக்கேன்
பனியிலும் என் பணி தொடர்கிறது
மார்கழி கோலத்தை விட - உன்
முகம் காணும் நேரத்தில் - நான்
அழகாய் உன் முன்னே தெரிவதற்காக
அதிகாலை எழுந்து அரை டஜன்
குளியல் போட்டு பனியிலும்
சுட வைக்கிறேன் என் முகத்தை
உன் ஒரு வார்த்தைக்காக
காலமாரினாலும் காலத்தில் காத்திருக்கேன்

