கடங்கநேரியானின் `நிராகரிப்பின் நதியில்’ என்ற கவிதை நூல் .....

கடங்கநேரியானின் `நிராகரிப்பின் நதியில்’ என்ற கவிதை நூல் .....

கடங்கநேரியான்... இந்த பெயரையும் இந்த முகத்தையும் நீங்கள் பேஸ்புக்கில் காரச்சார விவாதங்களில் பார்த்திருக்கலாம்..

பார்க்க கரடு முரடானவர் போலிருப்பார். ஆனால் பேசிப்பார்த்தீர்கள் என்றால் குழந்தை மனம்கொண்டவர் என்பது தெரியவரும். தொழில் முறையில் அவர் ஒரு medical rep. அந்த பணியிலிருந்து கொண்டு சமூகம் சார்ந்த தனது உணர்வுகளை எழுத்தில் வடித்து வருகிறார்.

கடந்த வாரம் அவரின் `நிராகரிப்பின் நதியில்’ என்ற கவிதை புத்தக வெளியீட்டுக்காக சென்னையிலிருந்து நான், அருள் எழிலன், சரவணன் குமரேசன், இயக்குநர் தாமிரா உள்ளிட்டோர் மதுரைக்குச் சென்றிருந்தோம்.

அங்கு எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், எர்ணஸ்ட்டோ சேகுவேரா, யாழி, ப்ரேம் ஆனந்த், வைரம் சிவகாசி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டார்கள். விழா சிறப்பாக நடந்தது.

ஏதோ ஃபேஸ்புக் பதிவர்களின் கூட்டம் போலிருந்தது..அவ்வளோ...ஃபேஸ்புக் பிரபலங்கள் வந்திருந்தார்கள். மதுரைப் பயணம் மகிழ்ச்சியை அளித்தது.

கடங்கநேரியானின் `நிராகரிப்பின் நதியில்’ கவிதை தொகுதியில் இருக்கும் கவிதைகளும் நன்றாகவே இருக்கின்றன. முன்னுரையில் இயக்குனர் தாமிரா கூறியிருப்பதுபோல் கடங்கநேரியான் இப்போது `ங்கா’ போட ஆரம்பித்திருக்கிறார். இந்த கவிதைக் குழந்தை தொடர்ந்து மக்கள் பிரச்னைகளை தனது கவிதை மொழியில் பேசி வளர வாழ்த்துகிறேன்.

1.சுயம்
---------

நான் அவனுமில்லை
இவனுமில்லை
நான் எவனுமில்லை
நான் நானேதான்

2.யார் பைத்தியம்
-------------------------

முழுக்கைச் சட்டை
கழுத்தை இறுக்கும் டை
அணிந்து
வேக வைக்கும்
வெயிலில்
நடந்து கொண்டிருக்கிறேன்
எதிர் பக்கம்
அரைகுறை ஆடையுடன்
மர நிழலில் அமர்ந்திருக்கும்
பைத்தியக்காரன்
என்ன நினைத்திருப்பான்
என்னைப் பற்றி?

மற்ற கவிதைகளை நிராகரிப்பின் நதியில் புத்தகத்தை வாங்கி படித்து இந்த கவிஞனை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :)

வெளியீடு –
தகிதா பதிப்பகம்
4/833, தீபம் பூங்கா,
கே.வடமதுரை
கோவை- 641017

நூல் கிடைக்குமிடம்: Discovery Book Palace, Chennai.
செம்மொழி புத்தக நிலையம் , புறவழிச் சாலை ,மதுரை

நன்றி
கார்டூனிஸ்ட் பாலா

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (15-Jan-13, 12:26 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 177

மேலே