தோல்விகள் துயரமல்ல. அவை........

வெற்றிகளையெல்லாம்
நான் இப்போது விரும்புவதேயில்லை,
தோல்விகளே எனக்கு சுகமாகிவிட்டதால்.


வெற்றிகள் இனிமையாக இருந்தாலும்,
அவற்றில் என்ன நன்மை இருக்கிறது,
என்று எனக்கு தெரியவில்லை.


தோல்விகளே! உனக்கு,
உண்மையான துணை யாரென விளக்கும்.


தோல்வியே!
உண்மையான வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும்.


தோல்வியே!
வெற்றியின் அருமையை புரியவைக்கும்.


கசப்பிற்கு பின்னே
இனிப்பை உண்டால்தான்,
அதன் இனிமை புரியும்.


தோல்விகளை எதிர்பார்க்காதீர்கள்,
அவை வரும்போது அவற்றை
சந்தோசமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.


தோல்விகள் துயரமல்ல. அவை,
உயரத்திற்கான படிக்கட்டுகள்.


தோல்விகாணாத வெற்றிகள் என்றுமே
வரலாற்றில் நிலைப்பதில்லை.


இறுதியாக ஒரு உதாரணத்தோடு
நிறைவு செய்கிறேன்.


மட்டை பந்தாட்டத்தில் உலகிலேயே,
அதிகளவில் (ரன்)ஓட்டம் குவித்த
சச்சின் டெண்டுல்கர்தான்,
ஓட்டமே எடுக்காமல்
அதிகளவில் ஆட்டமிழந்ததில் முதலிடம்
பெற்றவரும் அவர்தான்.
தோல்விகளை மட்டுமே நினைத்திருந்தால் இன்று அவருடைய பெயர் உலக சாதனை வரலாற்றில் இல்லாமலே போயிருக்கும்.
அவரின் எல்லா வெற்றிக்கும் அவரின்
தோல்விகளும் ஒரு முக்கிய காரணமாகும்.


தோல்விகள் துயரமல்ல.
அது ஒரு நல்ல வழிகாட்டி.

எழுதியவர் : vendraan (15-Jan-13, 2:25 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 193

மேலே