தமிழா !
தமிழா !!!!!!!!!!!!!!!!!!
தமிழன்னை கையில் தவழ்ந்திருக்கும் தவ புதல்வன் நீ
தரணி ஆள வந்த தனி மனிதன் நீ........
எழுச்சிகளை உருவாக்குவதில் ஏற்படுத்தாதே தாமதம்
உன் உணர்வுகளே உனக்கோர் ஆயுதம்............
விதையாய் மட்டும் அல்ல வேராகவும் இரு
வெற்றிக்கு மட்டும் அல்ல தோல்விக்கும் தோழனாய் இரு ...........
சோதனைகளை கண்டு சோர்ந்து விடாதே
சாதனைகளை பெறுவதில் சளித்து விடாதே ............
இமயம் உந்தன் இலக்காக இருக்கட்டும்
உதயவன் உன் செயலால் பெருமை அடையட்டும் ..............
இலக்கியம் படைத்த சரித்திர மனிதன் நீ
வந்தாரை வழ வைக்கும் மரபுள்ளவன் நீ ...............
உலக அரங்கே உன்னால் ஒளி பெறட்டும்
கடமையே உந்தன் உடமையாக இருக்கட்டும் ...............
கல்லறையை காணும் வரை கருவறையை மறக்காதே
ஒருபோதும் இலட்சிய பாதையிலிருந்து விலகாதே...........
இன்னல்கள் என்றும் இடையூறாக இருப்பது இல்லை
துயரங்கள் என்றும் துன்பத்தை தருவது இல்லை ................
இவைகள் தான் உன் இலட்சியத்தின் பாதைகள்...........
நம்பிக்கையோடு போராடு வெற்றி நிச்சயம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!