என் அம்மாவும் நானும் !
என் அம்மாவும் நானும்
குருதியின் உயிரை சுவாசத்தின்
மூச்சை துகிலின் கனவை
விழியின் காட்சியை உணவின்
சுவையை உள்ளத்தின் நெகிழ்வை
மனதின் வலியை ஒன்றாய்
பகிர்ந்தோம் பத்து மாதங்களாய்
என் அம்மாவும் நானும் !
இன்றும் பகிர்கிறோம் உள்ளத்தின்
வலிகளையும் உடலின் வலிகளையும்
பணத்தின் செறிவையும் நேரத்தின்
ஓட்டத்தையும் வாழ்க்கையின் நோக்கத்தையும்
என் அம்மாவும் நானும் .!