வசீகரமே ..

தூங்காத பொழுதுகளில் ..
உன் கனவுகள் வந்து
சமரம் வீசும் ...

அதிகாலை தூக்கத்தில்..
உன் கூந்தலின் ஈரம் ..
என்னை சூடேற்றும் ..

மெத்தையில் தனியே ..
புரளும் போது
உன் நினைவுக்கயிறு
என்னை கட்டிப்போடும் ...

தொட்டு தழுவ மாட்டாயா ..
என்று
என் ரோமக்கால்கள்
தவமிருக்கும் ..

தலையனையோரம்
உன் கம்மலின் முனகல் ..
இளமையை வருடி
இம்சிக்கும் ..

உன் நகக்கீரல் பட்ட
மன்மதன் அம்பு
உயிர் கிள்ளும் ..

நீ துடைத்த துண்டு
நான் தொட்டால் அனல் வீசும் ..

வா வசீகரமே... உன்
சேலை தலைப்பில் ..
என்னையும் சேர்த்துக்கொள் ..!!!

எழுதியவர் : அபிரேகா (18-Jan-13, 2:20 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 108

மேலே